சுற்றுலா வந்த பெண்ணிடம் பறித்த ஐஸ் கிரீமை ருசி பார்த்த குரங்கு

 


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா பயணிகள் குவிந்து வரும் நிலையில், அங்குள்ள குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று (மே 3) சுற்றுலா தலம் ஒன்றில் பெண் ஒருவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அங்கு வந்த குரங்கு ஒன்று மின்னல் வேகத்தில் அவரது ஐஸ்கிரீமை பறித்து சென்றது. மக்கள் முன்னிலையிலேயே அந்த ஐஸ்கிரீமை ருசி பார்த்த குரங்கின் சேட்டையை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.

Post a Comment