தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜித்குமார். சினிமாவுக்கு பிரேக் போட்ட அவர், தற்போது கார் ரேஸில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்குமாரை பாராட்டி பேசினார். அப்போது, “அஜித்குமார் மக்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ளவர். அவர் அரசியலுக்கு வரவேண்டும். அவரிடம் தனிப்பட்ட முறையில் நல்ல பழக்கம் எனக்கு இருக்கிறது” என கூறியுள்ளார்.
