மொபைல் செயலி மோசடி: வங்கி அதிகாரிக்கு ரூ.45.33 லட்சம் இழப்பு

 


டெல்லியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர், பங்குச் சந்தை முதலீடு என்ற பெயரில் மொபைல் செயலி மூலம் ரூ.45.33 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட டிரேடிங் செயலி போலியானது என்றும், உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கபில் பெயின், மனோஜ் சர்மா, கமல் பாண்டே ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். பணப் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட வங்கி கணக்குகள், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்களை வைத்து 3 பேரை கைது செய்துள்ளனர்.

Post a Comment