தமிழகத் தேர்தலில் 107 இடங்களை வென்றுள்ள தவெகவிற்கு ஆட்சி அமைக்க இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகின்றன. இதனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுடன் தவெக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், பிற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் தமிழகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்பார்.
