இங்கிலாந்து நாட்டின் தெற்கே பிரிஸ்டல் நகரில் ஸ்டெர்ன்கோர்ட் சாலையில் உள்ள வீடு ஒன்றில் இன்று (மே.3) காலை 6.30 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். இதனை சாமர்செட் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். வெடிவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி அவர்களுடைய குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
