மது அருந்திய தம்பதி இடையே மோதல்.. கணவரின் மண்டை


நேபாள நாட்டை சேர்ந்த தம்பதி தம்பருஅஸ்ரிகா (50) - மாயா (41) ஆகியோர் கடந்த 4 மாதங்களாக சென்னை அம்பத்தூர், மங்களபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இருவரும் மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் (மே.1) இரவு இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. அதில் ஆத்திரமடைந்த மனைவி மாயா, கணவரின் மண்டையை உடைத்தார். போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

Post a Comment