மியான்மர் நாட்டில் இன்று (மே.3) காலை 11.51 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிக்டர் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 70 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 22.064 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.565 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்தனர்.
