சிலிண்டர் விலை உயர்வு.. விறகுகளின் விலையும் கிடுகிடு

 


வர்த்தக சிலிண்டர்களின் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் விறகுகளின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஈரான்-அமெரிக்க போர் காரணமாக ஏற்பட்ட தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு வர்த்தக சிலிண்டர் விலையை ரூ.993 உயர்த்தி, மொத்த விலையை ரூ.3,237 ஆக ஆக்கியுள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 100 கிலோ விறகு ரூ.700 வரை விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.1500 வரை விற்கப்படுகின்றன.‌

Post a Comment