நெதர்லாந்து இளவரசிகளுக்கு கொலை மிரட்டல்.. இளைஞர் கைது

 


நெதர்லாந்து நாட்டு இளவரசிகளான கத்தரீனா-அமாலியா (22) மற்றும் அலெக்ஸியா (20) ஆகியோரைக் கொல்ல சதி திட்டம் தீட்டியதாக 33 வயது இளைஞர் ஒருவர் ஹேக் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து இளவரசிகளின் பெயர்கள் மற்றும் 'ரத்த குளியல்' போன்ற வார்த்தைகள் எழுதப்பட்ட கையெழுத்து குறிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 2022-ல் இளவரசி அமாலியாவுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலிடமிருந்து மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment