திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.8,000 மதிப்புள்ள இல்லத்தரசி கூப்பன் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த கூப்பன்கள் மூலம் வாஷிங் மெஷின், டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க முடியும் என கூறப்பட்டது. இதனிடையே நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியமைக்கப்போவது யார்? என்பது மாலையில் தெரியவரும். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தரசி கூப்பன் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் முதல் கையெழுத்து போடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
.webp)