தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்குமார் (22) - ஸ்ருதி (20) என்ற காதல் ஜோடிக்கு, தங்கள் குடும்பத்தினரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், பணம் சம்பாதித்த பிறகு திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதனால், வேலைக்காக சாய்குமார் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட நிதி பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனையறிந்த ஸ்ருதி, வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
