தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ-க்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூர் கட்சி அலுவலகத்தில் இன்று (மே.5) ஆலோசனை நடத்துகிறார். தொங்கு சட்டசபை அமைந்துள்ள நிலையில், ஆட்சியமைக்க ஆதரவு கேட்கும் கட்சிகள் குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நேற்று (மே.4) நடைபெற்ற நிலையில், தவெக 108 இடங்களில் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
