இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு மற்றும் மின் விநியோகக் கட்டமைப்பு தோல்வி காரணமாக விரைவில் மின்தடை ஏற்படும் என்ற தகவல்கள் தவறானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைக்கு நாட்டில் 19 நாட்களுக்கு போதுமான 53.7 மில்லியன் டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம் சீராக நடைபெற்று வருவதாகவும் அரசு உறுதி அளித்துள்ளது.
