தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு இன்று ரூ.1,440 குறைந்துள்ளது. நேற்று (மே.04) ஒரு சவரன் ரூ.1,12,000க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.1,440 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,10,560க்கு விற்பனையாகிறது. அதேபோல் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,000க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ.180 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,820க்கு விற்பனையாகிறது.
