நெப்டியூன் கோளுக்கு அப்பால் உள்ள பல்லாயிரக்கணக்கான சிறு விண்வெளிப் பொருட்களில் (Trans-Neptunian Objects - TNO) ஒன்றான 2002 XV93 இல் வளிமண்டலம் இருப்பதை ஜப்பான் தேசிய வானியல் ஆய்வு மையத்தின் (NAOJ) விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
இதுவரை புளூட்டோவில் மட்டுமே வளிமண்டலம் இருப்பதாக அறியப்பட்டது. அளவில் சிறிய கோள்களில் ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதால், அங்கு வளிமண்டலம் இருக்க வாய்ப்பில்லை என்றே கருதப்பட்டது.
கடந்த 2024, ஜனவரி 10 அன்று, இந்த சிறு கோள் ஒரு நட்சத்திரத்தை மறைத்தபோது, அந்த நட்சத்திரத்தின் ஒளி மெதுவாக மங்கியது. இதன் மூலம் வளிமண்டலத்தின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.
இதன் வளிமண்டல அழுத்தம் புளூட்டோவை விட 50 முதல் 100 மடங்கு குறைவானது. பூமியின் அழுத்தத்தோடு ஒப்பிடும்போது இது சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி மடங்கு குறைவு.
விண்வெளியின் இந்தப் பகுதியில் வெப்பம் -220°C க்கும் குறைவாக இருக்கும். இவ்வளவு குளிரில் வாயுக்கள் திரவமாகவோ அல்லது திடப்பொருளாகவோ மாறிவிடும் என்று நம்பப்பட்டது. எனினும், இரண்டு காரணங்களால் இந்த வளிமண்டலம் உருவாகியிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சிறு கோளின் உட்புறத்தில் இருக்கும் ஏதோ ஒரு வெப்ப ஆதாரம். விண்வெளியில் பிற பொருட்கள் இந்த கோளின் மீது மோதியதால் ஏற்பட்ட தாக்கம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டுபிடிப்பு, ஜப்பானின் நாகானோ, கியோட்டோ மற்றும் புகுஷிமா ஆகிய பகுதிகளில் உள்ள தொழில்முறை மற்றும் தன்னார்வ வானியல் ஆய்வாளர்களின் கூட்டு முயற்சியால் சாத்தியமாகியுள்ளது.
சிறிய தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.