புயலைக் கிளப்பிய ‘புதுச்சேரி’



தமிழ்நாட்டில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் ஆட்சியமைக்க முடியாமல் தவெக திணறிக் கொண்டிருக்கும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக எம்எல்ஏக்கள் பலர் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் தமிழக அரசியல் குறித்தும், அதிமுகவின் நிலைப்பாடு குறித்தும், புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அளித்திருக்கும் பேட்டி தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்புயலைக் கிளப்பி இருக்கிறது. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர், ” தவெக விஷயத்தில் ஆளுநர் செய்வது சரிதான்.. விஜய்க்கு பெரும்பான்மை இல்லையே..நேத்து பேஞ்ச மழைல மொளைச்ச காளான் தவெக.. அவங்களும் அதிமுக-வும் Equal இல்ல. பிள்ளைகளை தாய் பார்க்க வருவது போல எடப்பாடி பழனிசாமி புதுச்சேரி வருகிறார்.

சென்னையில் மிகவும் வெப்பமாக இருப்பதாலும், இங்குள்ள வானிலை இதமாக இருப்பதாலும், தமிழகத்தைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் தங்கியுள்ளனர். அதிமுக மாபெரும் எஃகு கோட்டை; அதில் சின்ன ஓட்டைகூட விழ வாய்ப்பில்லை; அதிமுக எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிசாமி கடலில் குதிக்கச் சொன்னால்கூட அவர்கள் குதிப்பார்கள். அதிமுக பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி 118 MLAக்கள் ஆதரவுடன் ஆட்சி அமைப்பார். மு.க.ஸ்டாலின் தோல்விக்கு எடப்பாடி பழனிசாமி மனதார கஷ்டப்பட்டார்,” என்றார்.


Post a Comment