உழவு இயந்திரத்தால் மோதிக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினால் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதும் பிரதான சந்தேகநபர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேகநபர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக முதலாம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
இதனையடுத்து அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவிட்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஒன்பதாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த சனிக்கிழமை கொடிகாமம், கெற்பேலி பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற கொடிகாமம் காவல் நிலையத்தின் இரண்டு உத்தியோகத்தர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது
