லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் பல்வேறு எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.
அதன்படி, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
அந்தவகையில் லங்கா சூப்பர் டீசலின் விலை18 ரூபாயால் உயர்த்தப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) 590 ரூபாயாகவும், எக்ஸ்ட்ரா பிரீமியம் பெட்ரோல் 465 ரூபாயாவும், எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) 620 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
