சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும், அவசர காலங்களில் பொதுமக்களுக்கு உடனடி பதிலளிப்பதற்கும் காவல்துறை தலைமையகத்தில் விசேட கட்டுப்பாட்டு அறை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அவசரத் தேவைகள் அல்லது பாதுகாப்பு தொடர்பான முறைப்பாடுகளை வழங்க கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது:
011-2013051
011-2027148
011-2027149
011-2027149
011-2430912
புத்தாண்டு காலத்தில் மக்கள் நெரிசல் மிக்க இடங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் மேலதிக காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது
.jpg)