இலங்கையில் தற்போது நிலவும் பாரிய எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், சீனா முன்னுரிமை அடிப்படையில் எரிபொருளை வழங்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இந்த ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, சீனாவிலிருந்து முதலாவது எரிபொருள் கப்பல் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இது 'சினோபெக்' நிறுவனத்தின் வழமையான இருப்புகளுக்கு மேலதிகமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனும் அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
