இன்று (02) காலை 8.00 மணி முதல் 24 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் "சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறைகளுக்கு" எதிர்ப்புத் தெரிவித்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
முறையான விதிமுறைகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் மருத்துவர்களின் சேவையைப் பாதிப்பதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இன்று (ஏப்ரல் 02) காலை 8.00 மணி முதல் தொடர்ந்து 24 மணிநேரத்திற்கு இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
