அதிகரித்த மின்சார கட்டணம்

 

இலங்கையில் அதிகரித்து வரும் எரிபொருள் விலை மற்றும் செயல்பாட்டு நெருக்கடிகள் காரணமாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின் உற்பத்தி செலவுகள் மற்றும் திட்டமிடல் குறித்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தேசிய மின் கட்டமைப்பு இயக்க நிறுவனம் (NSO) சமர்ப்பித்துள்ளது.

நாட்டின் மின் விநியோகத்தை உறுதிப்படுத்தும் தேசிய அமைப்பு இயங்குநரக நிறுவனம் , குறிப்பிட்ட சில மின் உற்பத்தி நிலையங்களில் டீசல் மூலமான மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த மார்ச் 30 ஆம் திகதி கணித்திருந்த டீசல் விலையான 376 ரூபாயை விட, தற்போது சுயாதீன மின் உற்பத்தியாளர்களுக்கு ஒரு லீற்றர் டீசல் 382 ரூபாயாக உயர்ந்துள்ளதே இந்தச் செலவு அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.


அதிகரித்து வரும் இந்த எரிபொருள் செலவுகள் மற்றும் விநியோகச் சவால்கள் மின்சார சபையின் நிதி நிலைத்தன்மைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக அந்த அறிக்கை எச்சரிக்கிறது.