சற்று முன் அரச உத்தியோகத்தர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

 


அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் வழங்கப்பட்டிருந்த விடுமுறையை இன்று (06) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருள் இருப்பைச் சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து கடந்த மார்ச் 17ஆம் திகதி பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.