எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு


எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.


 இதன்படி ஓவ்வொரு டீசல் லீற்றருக்கும் 100 ரூபாய் நிவாரணமும் பெற்றோல் லீற்றர் ஒன்றுக்காக 20 ரூபாய் நிவாரணமும் வழங்கப்படவுள்ளன.


இதற்காக மாதம் ஒன்றுக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 3 மாதங்களுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.