சற்று முன் இரத்தினபுரியை அதிர வைத்த சம்பவம்

 


இரத்தினபுரியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம், நேற்று (05) பனாமுறை - வேஅதுர பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் வேஅதுர- பனாமுறை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்று (05) இரவு அப்பகுதியில் உள்ள வேறொரு வீட்டிற்குச் சென்றிருந்த போது, அங்கிருந்த இருவர் அவரை தாக்கியதுடன், கூர்மையான ஆயுதங்களாலும் தாக்கியுள்ளனர்.

இதனை அடுத்து பலத்த காயங்களுக்குள்ளாகிய வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பனாமுறை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.