எரிவாயு இனி வராதா? இனி விறகு அடுப்பா?

 


பல குடும்பங்கள் மீண்டும் பாரம்பரியமான விறகு மற்றும் சிரட்டை அடுப்புகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என இலங்கை பாவனையாளர் முன்னணி கவலை தெரிவித்துள்ளது.

ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கை பாவனையாளர் முன்னணி தலைவர் அசேல சம்பத் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், "எரிவாயுவைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு விலை உயர்ந்துள்ளதால், இனிவரும் காலங்களில் மக்கள் மீண்டும் பழைய முறையிலான விறகு அடுப்புகளுக்கே திரும்ப வேண்டியுள்ளது

குறிப்பாக, சிரட்டைகளைப் பயன்படுத்தி எவ்வாறு அடுப்புகளை உருவாக்குவது என்பது குறித்து மக்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய துரதிஷ்டவசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

எரிவாயு விலையேற்றத்தால் உணவக உரிமையாளர்கள் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். இதன் விளைவாக கொத்து, பிரைட் ரைஸ் போன்ற உணவுகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சாதாரண மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் பராட்டா, வடை மற்றும் தேநீர் போன்ற உணவுகளின் விலைகளும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.