விளையாட்டுப் பொருட்களுக்குள் மறைத்து கூரியர் சேவை ஊடாகக் கடத்தி வரப்பட்ட 'ஐஸ்' போதைப்பொருளுடன் கல்முனைப் பகுதியில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல்துறை பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (08) மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கூரியர் மூலம் வந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினராகச் செயற்பட்ட 43 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
