சற்று முன் பெற்றோல் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்

 


ஈரானியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, செனகல் நாட்டு அமைச்சர்கள் அத்தியாவசியமற்ற வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இளைஞர் பேரணி ஒன்றில் உரையாற்றிய பிரதமர் உஸ்மான் சோன்கோ, தற்போதைய ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை, வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக நைஜர், ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கான தனது சொந்தப் பயணங்களையும் பிரதமர் சோன்கோ ஒத்திவைத்துள்ளார்.

அரசாங்கச் செலவினங்களைக் குறைப்பதற்கான மேலதிக திட்டங்களை சுரங்க அமைச்சர் அடுத்த வாரம் அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செனகலின் பொதுக் கடன் அதன் பொருளாதாரத்தின் மொத்த அளவை விட 130 வீதம் அதிகமாக உள்ளது.


முந்தைய அரசாங்கம் சுமத்திய இந்த கடன் சுமையே தற்போதைய நெருக்கடியைச் சமாளிப்பதைக் கடினமாக்கியுள்ளதாகப் பிரதமர் குற்றம் சுமத்தியுள்ளார்.


எரிபொருள் விலை உயர்வால் ஒட்டுமொத்த ஆப்பிரிக்கக் கண்டமும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.


தென்னாப்பிரிக்கா எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல் மீதான வரியைக் குறைத்துள்ளது.