ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படாவிட்டால், இன்னும் மூன்றே வாரங்களில் ஐரோப்பாவில் ஜெட் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என ஐரோப்பிய கண்டத்தின் விமான நிலையங்களுக்கான வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.
பாரசீக வளைகுடா விமான எரிபொருளின் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. இது ஐரோப்பாவின் இறக்குமதியில் சுமார் 50% பங்கைக் கொண்டுள்ளது.
குறிப்பாக ஐரோப்பாவில் கோடை சுற்றுலாப் பருவம் நெருங்கி வருவதால், ஜெட் எரிபொருள் கிடைப்பது குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு கவலைகள் அதிகரித்து வருகின்றன என ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் (ACI) ஐரோப்பா தெரிவித்துள்ளது
இதன்படி விநியோகப் பற்றாக்குறையானது விமான நிலையச் செயல்பாடுகளையும் விமானப் போக்குவரத்து இணைப்பையும் கடுமையாகச் சீர்குலைக்கும்.
எரிபொருள் பற்றாக்குறை குறித்த கவலைகள் காரணமாக, உலகெங்கிலும் உள்ள பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே விமான சேவைகளைக் குறைத்து, பயணிகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளன.
கடந்த வாரம், ஐரோப்பிய ஜெட் எரிபொருளின் முக்கிய விலையானது, போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு தொன்னுக்கு 831 டொலராக இருந்த நிலையில், தற்போது 1,838 டொலர் (1,387 பவுண்ட்) என்ற வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
