எரிபொருள் கையிருப்பு தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு

 

ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் TASS செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசியல் ரீதியான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.