நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவித்தல் இன்று (13) பிற்பகல் 04.00 மணி முதல் நாளை பிற்பகல் 04.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு இவ்வாறு முதலாம் கட்ட 'கவனம் செலுத்துக' (Level 1 - Watch) எனும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
.jpeg)