ஹோமாகம மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் இன்று (06) 12 மணிநேர நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இந்த நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
இதேவேளை பாதுக்க மற்றும் அதனை அண்மித்துள்ள பகுதிகளில் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த நீர்வெட்டு இன்று காலை 8.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாகவே, நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
.jpeg)