தமது செயற்பாடுகளைப் பாதிக்கும் தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் இன்று (06) காலை 9.30 மணிக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) முன்பாக அமைதிப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் (PDA) அறிவித்துள்ளது.
இது குறித்து குறித்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா கருத்துத் தெரிவிக்கையில், இந்த போராட்டத்திற்கான முக்கிய காரணங்களையும் எதிர்கொள்ளும் சவால்களையும் விளக்கினார்.
இதன்படி தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை-இரட்டை எரிபொருள் விநியோக முறையினால் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய எரிபொருள் வில சூத்திரத்தின் கீழ், பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு 6% செயல்பாட்டு இலாபம் கிடைக்கிறது.
