புத்தாண்டு வாரத்தில் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் அண்மை காலங்களில் ஏற்பட்ட விபத்துகள் காரணமாக சுமார் 29 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடயத்தை தொற்றுநோய் பிரிவின் விபத்துத் தடுப்புப் பிரிவின் சமூக நல மருத்துவ நிபுணர் சமித சிறிதுங்க தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 13 இலட்சம் பேர் விபத்துகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதுடன் அவர்களில் பெரும்பான்மையானோர் புத்தாண்டு காலங்களிலேயே அனுமதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
