சற்று முன் ஏற்ப்பட்ட விபத்தில் பலர் உயிரிழப்பு

 


கொள்ளுப்பிட்டி, சி.வி. அவென்யூ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மாடிக் கட்டடமொன்றின் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து நபரொருவர் உயிரிழந்தார். 


இவ்வாறு உயிரிழந்தவர் தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளது. 


நிர்மாணிக்கப்பட்டு வரும் இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இரும்புப் பகுதியொன்றைப் பொருத்த முற்பட்ட போதே, கால் தவறி கீழே விழுந்ததில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 


சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.