பாடசாலையில் மாணவன் மற்றொரு மாணவனைக் காகித வெட்டியால்(paper cutter) வெட்டிக் காயப்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக டன்கொட்டுவ காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (06) பிற்பகல் பாடசாலையில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்த மாணவனும், சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு மாணவனும் டன்கொட்டுவ பகுதியில் உள்ள ஒரு புகழ்பெற்ற பாடசாலையில் ஒரே வகுப்பில் பயில்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், இரு மாணவர்களும் பள்ளியில் அடிக்கடி சண்டையிட்டு வந்ததும், நேற்று (06) பிற்பகலிலும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது
