சற்று முன் ஏற்ப்பட்ட கொடுர கொலை

 



அநுராதபுரத்தில் வயோதிப பெண் ஒருவர் பேரனால் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம், தம்புத்தேகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட மல்வானேகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் தம்புத்தேகம - மல்வானேகம பகுதியைச் சேர்ந்த 82 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், தனிப்பட்ட தகராறு காரணமாக உயிரிழந்த வயோதிப பெண்ணின் பேரனே இந்த கொலையைச் செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 23 வயதுடைய சந்தேகநபரை காவல்துறை கைது செய்யதுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்கான தம்புத்தேகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்புத்தேகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.