சற்று முன் ஆப்கானிஸ்தானை பதர வைத்த சம்பவம்



ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, தலைநகர் காபூலில் வீடு ஒன்று இடிந்து வீழ்ந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.9 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ஆப்கானிஸ்தான் மட்டுமன்றி, அண்டை நாடுகளான பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் இந்தியாவின் தலைநகர் புது டெல்லி ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலைகளால் சூழப்பட்ட நாடான ஆப்கானிஸ்தான், இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஒரு நாடாகக் கருதப்படுகிறது.

குறிப்பாக, அங்கு ஏற்படும் நிலநடுக்கங்கள் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன.

அங்கு நிலநடுக்கம் காரணமாக ஆண்டுக்குச் சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.