சற்று முன் ஏற்ப்பட்ட விபத்தில் ஒருவர் பலி


 மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி காத்தான்குடியில் ஒரே திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளானதில் வெளிநாட்டிலிருந்து வந்திருந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காத்தான்குடியில் இருந்து சம்பவ தினமான நேற்று புதன்கிழமை (1) இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி உயிரிழந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்னால் சென்ற மோட்டர் சைக்கிளின் புகைபோக்கியில் தட்டுப்பட்டதையடுத்து மோதி விபத்துக்கு உள்ளானதில் இளைஞன் சம்பவ இடம்திலே உயிரிழந்தார்

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.