ஈரான் போர் காரணமாக உலகளவில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மசகு எண்ணெய் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அவுஸ்திரேலியா தனது வரலாற்றில் சந்தித்திராத எரிபொருள் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நீண்டதூரப் போக்குவரத்துத் துறையில் பயன்படுத்தப்படும் 'ரோட் ட்ரெயின்கள்' எனப்படும் பிரம்மாண்ட பாரவூர்திகள் டீசல் விலையேற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
போருக்கு முன்னர் ஒரு லிட்டர் டீசல் 180.2 சென்ட் ஆக இருந்த நிலையில், தற்போது அது 312.7 சென்ட் ஆக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை 171 சென்ட்டில் இருந்து 240.1 சென்ட் ஆக அதிகரித்துள்ளது.
ஒரு பாரவூர்தியின் எரிபொருள் தாங்கியினை நிரப்புவதற்கு முன்னர் 3,600 அவுஸ்திரேலிய டொலர்கள் தேவைப்பட்ட நிலையில், தற்போது 7,500 டொலர்கள் வரை செலவிட வேண்டியுள்ளது.
.jpg)