யாழில் கத்திக் குத்து

 


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் கத்தி குத்துக்கு இலக்கான ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கிடையே ஏற்பட்ட முரண்பாடு கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது.

இதன்போது அந்த கத்தி குத்தில் காயமடைந்த நபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செயாவதற்காக சென்ற நிலையில், அவரை வைத்தியசாலைக்கு செல்லுமாறு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.