சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சமயத்தில் சமூக ஊடகப் பயன்பாட்டில் கவனமாக இருக்குமாறு காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
அதன்படி, விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் பயணங்களின் புகைப்படங்களையும் காணொளிகளையும் சமூக ஊடகங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
தாங்கள் வீட்டில் இல்லை என்று உலகிற்குத் தெரிவிப்பது திருடர்களுக்கு சாதகமாக அமையும் என காவல்துறை வலியுறுத்துகிறது
மேலும், மக்கள் வீடு திரும்பிய பிறகு தங்கள் அனுபவங்களை சமூக ஊடகத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொள்கிறது.
