தோட்டதொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-வங்கிகளுக்கு வரும் பணம்

 


மார்ச் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் QR நடைமுறையின் கீழ் உரம் பெற்றுக்கொள்வதற்காக 226,511 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். 


இதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை 187,759 சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை விவசாயிகளுக்கு 21,117.7 மெற்றிக் தொன் மானிய உரம் வழங்கப்பட்டுள்ளது. 


அரசாங்கம் தற்போது 50 கிலோ கிராம் உர மூடைக்கு 4,000 ரூபாவையும், 25 கிலோ கிராம் உர மூடைக்கு 2,000 ரூபாவையும் நிதி மானியமாக வழங்கி வருகின்றது. 


இதுவரை 50 கிலோ கிராம் எடையுள்ள 334,256 மூடைகளும், 25 கிலோ கிராம் எடையுள்ள 176,199 மூடைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2024/25 முழு ஆண்டிலும் 84,472 விவசாயிகள் மாத்திரமே மானிய உரத்தைப் பெற்றிருந்தனர். 


ஆனால், புதிய நடைமுறையின் கீழ் ஆறு மாதங்களுக்குள் 187,759 விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டுள்ளது. 


இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 122.3 சதவீத வளர்ச்சியாகும். 


கடந்த காலத்தில் 13,015.50 மெற்றிக் தொன் உரம் விநியோகிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய QR முறையின் கீழ் மார்ச் இறுதிக்குள் 21,117.7 மெற்றிக் தொன் விநியோகிக்கப்பட்டுள்ளது.