வவுனியா, பட்டானிச்சூர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதி வழியாக துவிச்சக்கரவண்டி பட்டாணிச்சூர், வீதியின் முதலாம் ஒழுங்கையில் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பின்னால் வந்த பாரவூர்தி துவிச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இடம்பெற்ற உடன், பாரவூர்தியின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் பாலகுகன் (வயது 64) என்ற ஓய்வுபெற்ற ஆசிரியரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நெளுக்குளம் பொலிஸார், விபத்து இடம்பெற்ற விதம் குறித்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
