விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வரவிருக்கும் பணம்

 


25,000 தொன் உரத்தை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, உலகளாவிய சூழ்நிலையில் உருவாகியுள்ள உரப் பிரச்சினையை அரசாங்கத்தினால் வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சிறுபோகம் ஆரம்பமாகும் போது விவசாயிகளிடையே உரப் பிரச்சினை குறித்த கவலைகள் காணப்பட்ட போதிலும், நாட்டில் தற்போது தேவையையும் விட அதிகளவில் சேற்று உரம் மற்றும் பண்டி உரம் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் தொடர்பில் சிக்கல் காணப்பட்டாலும், நாட்டில் தற்போது ஒரு இலட்சம் தொன் யூரியா கையிருப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே நாளை 25 ஆயிரம் தொன் உரம் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.