சற்று முன் கொத்மலையை உலுக்கிய சம்பவம்

 



சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகளே இந்த அனர்த்தத்திற்கு இன்று (1) முகங்கொடுத்துள்ளனர். 

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய காட்டு வழி ஒன்றின் ஊடாக சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

இதனையடுத்து 1990 அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.