புத்தாண்டில் நிகழும் சூரியன் பெயர்ச்சி: டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்!

 

ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கும், கிரங்கள் இணைவதால் உருவாகும் ராஜயோகங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரங்களின் நிலையானது 12 ராசிகளில் வாழ்விலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று நம்ப்படுகின்றது.

அந்தவகையில், ஏப்ரல் 14, செவ்வாய்கிழமை, சூரியன் மேஷ ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். அன்று தமிழ் புத்தாண்டான பராபவ ஆண்டும் பிறக்கி்ன்றது. 

தமிழ் புத்தாண்டின் முதல் நாள் சூரியன் பெயர்ச்சியும் நிகழ்வதால் இது ஜோதிட முக்கியத்தும் பெறுகின்றது.அதன் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும் பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியில் அதிகளவு சாதக பலன்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு, சூரியனின் பெயர்ச்சி உச்சகட்ட சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது. குறிப்பாக சூரியன் பெயர்ச்சியுடன் இந்த ஆண்டு ஆரம்பிப்பதால், தொழில் ரீதியில் இவர்களுக்கு அசுர வளர்ச்சி உறுதி. 

பணியி்டத்தில் இந்த ஆண்டில் ராஜ மரியாதை கிடைக்கப்போகின்றது. அதிகாரம் மிக்க பதவியில் அமர்வதற்கான யோகம் உண்டாகும்.

வேலை தேடிபடுவர்களுக்கு இந்த ஆண்டு ஆரம்பித்ததுமே மனதுக்கு பிடித்த வேலை அமைவதற்கான வாய்ப்புகள் கூடிவரும். பொருளாதார ரீதியில் இவர்கள் வளர்ச்சி உச்சத்தை தொடும்.மொத்தில் சூரிய பகவான் ஆசியால் இவர்களின் வாழ்ககை ஜொலிக்கப்போகின்றது.

ரிஷபம்

சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் நிகழ்கிறது. ஏனைய கிரகங்களில் நிலையும் இவர்களுக்கு சாதகமாகவே இருப்பதால், தொழில் விடயத்தில் அமோகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. 

இக்காலகட்டத்தில் ரிஷப ராசிக்காரர்கள் பல்வேறு வகையான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம்.ஆனால் அதனில் இருந்து முன்னேற்றாத்துக்கான புதிய வாய்ப்புகள் பிறக்கும்.

இவர்களின் நிதி நிலை இந்த ஆண்டு முழுவதுமே அமோகமாக இருக்கும். புதிய தொழிலை ஆரம்பிக்க நினைப்பவர்களுக்கும் இது சாதகமான காலகட்டமாக இருக்கும்.

மிதுனம்

சூரியன் பெயர்ச்சி மிதுன ராசியின் பதினொன்றாம் வீட்டில் நிகவதால், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். குறிப்பான பணியிடத்தில் நீண்ட காலமாக இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு உண்டாகும்.

புதிய வழிகளில் வருமானத்தை ஈட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகள் கூடி வரும். நீண்டகாலம் நிலுவையில் இருந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். 

சூரிய பகவானின் ஆசியால் புதிய பதவியில் அமரும் யோகம் காணப்படுகின்றது இவர்களின் நிதி நிலை இந்த காலகட்டத்தில் மின்னல் வேகத்தில் உயரும்.குடும்பத்தின் ஒத்துழைப்பால் வெற்றிகள் குவியும்.