திக் திக் நிமிடங்கள்: இரவு பகலாக நடந்த சண்டை- 2 நாட்களின் பின் விமானி மீட்பு

 


F-15 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை தொடர்ந்து காணாமல் போன அமெரிக்க விமானி இரண்டு நாட்களுக்குப் பிறகு அதிரடி நடவடிக்கை மூலம் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை F-15E Strike Eagle வகை விமானத்தை ஈரான்‌ ராணுவம்.தாக்கி வீழ்த்தியிருந்தது.

அதில் ஒருவர் மீட்கப்பட்டிருந்தார். இன்னொருவர் காணாமல் போன நிலையில் அமெரிக்கா மிக விரைவான தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியது.

அல் ஜசீரா ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமெரிக்க அதிகாரியின் கூற்றுப்படி, இரண்டு நாட்களாக ஈரானியப் படைகளிடமிருந்து தப்பித்து வந்த அந்த விமானப்படை வீரரின் இருப்பிடத்தை அமெரிக்கப் படைகள் சுற்றி வளைத்து நெருங்கிக் கொண்டிருந்தன.

பொதுவாக, சிறப்பு அதிரடிப் படையினர் அதுபோன்ற ஒரு மீட்பு நடவடிக்கைக்குள் நுழைந்து, இருட்டில் ஒருவரை மிக விரைவாக வெளியேற்ற முயற்சிப்பார்கள். இது பல மணி நேரம் நீடித்ததாக எங்களிடம் கூறப்பட்டது.

ஜனாதிபதி ட்ரம்ப் பின்னர் அந்த மீட்புப் பணியின் பல விவரங்களை உறுதிப்படுத்தியதோடு, அந்த விமானப்படை வீரர் மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர் ஒரு கர்னல் என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.