நாளை அமுலாகும் 12 மணிநேர நீர் விநியோகத் தடை

 



நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள நீர் விநியோகக் கட்டுப்பாடுகள் நிமித்தம் நாளை (7) செவ்வாய்க்கிழமை கொழும்பின் சில புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் 12 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விசேட அறிப்பொன்றை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.


இதன்படி, ஹோமாகம நகரம், வேகந்த, பின்கெத்த வீதி, வளவ்வ வீதி, கெமுனு மாவத்தை, அத்துருகிரிய வீதி, கலவில வத்த, நியந்தகல, மாகம்மன, மஹகடுவான, தெனிய மற்றும் தியகம பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


நாளை இரவு 8 மணி வரை இந்த நீர் விநியோகத் தடை நீடிக்கும் என்பதால், பொதுமக்கள் நீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.