சற்று முன் QR முறையில் புதிய மாற்றம்

 


தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமையை மேலும் எளிமைப்படுத்தும் நோக்கில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது வாகனங்களை மொத்தமாகப் பதிவு செய்யக்கூடிய புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால இது குறித்துத் தெரிவிக்கையில்,

பெரிய அளவிலான வாகனங்களைக் கொண்ட நிறுவனங்கள், ஒவ்வொரு வாகனத்தையும் தனித்தனியாகப் பதிவு செய்வதற்குப் பதிலாக, ஒரே குழுவாகப் பதிவு செய்யும் வசதியை அமைச்சகம் உருவாக்கி வருகிறது.

இதுவரை சுமார் 6 மில்லியன் பயனாளர்கள் இந்த அமைப்பில் பதிவு செய்துள்ளனர். கடந்த மார்ச் 15 ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 2 மில்லியன் புதிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் தரவுத்தளத்தில் உள்ள தகவல்களுடன் முரண்பாடுகள் காணப்படுவதால், சுமார் 200,000 பயனாளர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ளக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயந்திர எண்களை வாசிப்பதில் ஏற்படும் எழுத்துப் பிழைகளே (உதாரணமாக: '0' என்பதற்குப் பதில் 'O') இதற்கு முக்கியக் காரணமாகும். இவை தற்போது உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு வருகின்றன.